Saturday, November 7, 2015

இலங்கையின் குடியேற்றங்கள்

  • இலங்கையில் ஒரு இலச்சத்து இருபத்தையாயிரம் (125 000) வருடங்களுக்கு முன்பே மனிதன் வாழ்ந்து இருகின்றான். 
  • இந்து சமுத்திரத்தைக் கடந்து வந்த ஹோமோ சேப்பியன் நாட்டின் நாலா திசைகளிலும் பரவி வாழ்ந்துள்ளான்.
  • மானிட வாழ்க்கை வரலாறு  மூன்று கால கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  1. வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்.
  2. முன் வரலாற்றுக்கால குடியேற்றங்கள்.
  3. வரலாற்றுக்கால குடியேற்றங்கள்.

வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்ற வகை

  1. நீண்டகாலம் நிலைத்திருந்த கற்க்காலம்
  2. நிரந்தர குடியேற்றங்களை நிறுவிய காலம்
  • இலங்கையின் கற்க்காலத்துக்குரிய ஆதாரங்கள் இரு இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது.
  1. இரத்தினபுரியும் அதன் சூழ உள்ள பிரதேசத்திலும் 90 அடி ஆழத்தில் காணப்படுகின்றது. இப்பதிவுகள் பிளைத்தொசின் எனும் புவியியல் காலப்பகுதியில் புதையுண்டு போயின.
  2. அதிவறண்ட வலய நிலத்திலுள்ள களிமண்னுடன் கூடிய மணலால் மூடப்பட்டுள்ளது. இதனை இரணைமடு படிவு என்று அழைப்பர்.

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை மனிதன் வாழ்ந்த இடங்கள்

  1. இரணைமடு
  2. பொம்பரிப்பு
  3. தம்புள்ள
  4. களுதிய
  5. கித்துல்கல
  6. பெளிலேன அதுல 
  7. பட்டதொம்பலேனா
  8. இராவணா எல்ல
  9. பெளிகல்ல
  10. பெல்லன்பதிபெள்ளஸ்ஸ



காலநிலை வலயங்களின் குடியிருப்புகளின் பரம்பல்

  1. தாழ்நில அதி வரள் வலயம்
  2. தாழ்நில குறை வரள் வலயம்
  3. தாழ்நில உலர் வலயம்
  4. தாழ்நில இடை உலர் வலயம்
  5. மலைநாட்டு இடை உலர் வலயம்
  6. தாழ்நில இடை ஈரவலயம்
  7. மலைநாட்டு ஈரவலயம்
  8. உயர் மலைநாட்டு ஈரவலயம்

குடியிருப்புகளின் அடிப்படை இயல்பு

இக்கால மனிதன் வெட்டவெளிகளிலும் கற்குகைகளிலும் வாழ்ந்தான்.      
  1. கரையோர வெட்டவெளிகள் . உதாரணம் : மினிகாகல்கந்த, புத்தல, பதிராஜவேல
  2. தாழ்நில ஈரவலய குகைகள். உதாரணம் : பாகியண்கல, பட்டதொம்பலென, கித்துல்கல, பெலிலேன
  3. தாழ்நில உலர் வலய குகைகள். உதாரணம் : சிகிரிய பொத்தான, அளிகல
  4. தாழ்நில உலர் வலய வெட்டவெளிகள். உதாரணம் : பெல்லன் பதி பெள்ளஸ்ஸ.
  5. மலையக பிரதேச வெட்டவெளிகள். உதாரணம் : பண்டாரவள, ஹோட்டன் சமவெளி.

இலங்கையின் மத்திய கற்காலத்துக்குரிய கேத்திரகணித உருவிலான கல்லாயுதங்கள்.