Saturday, November 7, 2015

இலங்கையின் குடியேற்றங்கள்

  • இலங்கையில் ஒரு இலச்சத்து இருபத்தையாயிரம் (125 000) வருடங்களுக்கு முன்பே மனிதன் வாழ்ந்து இருகின்றான். 
  • இந்து சமுத்திரத்தைக் கடந்து வந்த ஹோமோ சேப்பியன் நாட்டின் நாலா திசைகளிலும் பரவி வாழ்ந்துள்ளான்.
  • மானிட வாழ்க்கை வரலாறு  மூன்று கால கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  1. வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்றங்கள்.
  2. முன் வரலாற்றுக்கால குடியேற்றங்கள்.
  3. வரலாற்றுக்கால குடியேற்றங்கள்.

வரலாற்றுக்கு முற்பட்ட கால குடியேற்ற வகை

  1. நீண்டகாலம் நிலைத்திருந்த கற்க்காலம்
  2. நிரந்தர குடியேற்றங்களை நிறுவிய காலம்
  • இலங்கையின் கற்க்காலத்துக்குரிய ஆதாரங்கள் இரு இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது.
  1. இரத்தினபுரியும் அதன் சூழ உள்ள பிரதேசத்திலும் 90 அடி ஆழத்தில் காணப்படுகின்றது. இப்பதிவுகள் பிளைத்தொசின் எனும் புவியியல் காலப்பகுதியில் புதையுண்டு போயின.
  2. அதிவறண்ட வலய நிலத்திலுள்ள களிமண்னுடன் கூடிய மணலால் மூடப்பட்டுள்ளது. இதனை இரணைமடு படிவு என்று அழைப்பர்.

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை மனிதன் வாழ்ந்த இடங்கள்

  1. இரணைமடு
  2. பொம்பரிப்பு
  3. தம்புள்ள
  4. களுதிய
  5. கித்துல்கல
  6. பெளிலேன அதுல 
  7. பட்டதொம்பலேனா
  8. இராவணா எல்ல
  9. பெளிகல்ல
  10. பெல்லன்பதிபெள்ளஸ்ஸ



காலநிலை வலயங்களின் குடியிருப்புகளின் பரம்பல்

  1. தாழ்நில அதி வரள் வலயம்
  2. தாழ்நில குறை வரள் வலயம்
  3. தாழ்நில உலர் வலயம்
  4. தாழ்நில இடை உலர் வலயம்
  5. மலைநாட்டு இடை உலர் வலயம்
  6. தாழ்நில இடை ஈரவலயம்
  7. மலைநாட்டு ஈரவலயம்
  8. உயர் மலைநாட்டு ஈரவலயம்

குடியிருப்புகளின் அடிப்படை இயல்பு

இக்கால மனிதன் வெட்டவெளிகளிலும் கற்குகைகளிலும் வாழ்ந்தான்.      
  1. கரையோர வெட்டவெளிகள் . உதாரணம் : மினிகாகல்கந்த, புத்தல, பதிராஜவேல
  2. தாழ்நில ஈரவலய குகைகள். உதாரணம் : பாகியண்கல, பட்டதொம்பலென, கித்துல்கல, பெலிலேன
  3. தாழ்நில உலர் வலய குகைகள். உதாரணம் : சிகிரிய பொத்தான, அளிகல
  4. தாழ்நில உலர் வலய வெட்டவெளிகள். உதாரணம் : பெல்லன் பதி பெள்ளஸ்ஸ.
  5. மலையக பிரதேச வெட்டவெளிகள். உதாரணம் : பண்டாரவள, ஹோட்டன் சமவெளி.

இலங்கையின் மத்திய கற்காலத்துக்குரிய கேத்திரகணித உருவிலான கல்லாயுதங்கள்.



Saturday, October 17, 2015

வரலாற்று மூலாதாரங்கள்
வரலாற்று மூலதரங்கள் இருவகைப்படும். அவையாவன
தொல்பொருள் மூலாதாரங்கள்
இலக்கிய மூலாதாரங்கள்


தொல்பொருள் மூலதரங்கள்
  1. கல்வெட்டு
  2. சிதைவு
  3. நாணயம்
இலக்கிய மூலாதாரங்கள்
  1. உள்நாட்டு இலக்கிய மூலாதாரம்
  2. வெளிநாட்டு இலக்கிய மூலாதாரம்

தொலமியின் இலங்கை வரைபடம்

  • தொல்பொருள் மூலதரங்களை எழுத்தாவணங்கள், நாணயங்கள், சிதைவுகள், சித்திரங்கள், சிற்பங்கள், செதுக்கல்கள், கல்வெட்டுகள் என வகைப்படுத்தலாம்.
  • சாதனங்கள் எனும் போது கருங்கல், களிமண் தட்டு, சுவர், செப்புத்தகடு, பொன்தகடு, மரப்பலகை என்பனவற்றில் எழுதி வைக்கப் பட்டுள்ளவற்றைக் குறிப்பதாகும்.
  • கருங்கல்லில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆவணம் கல்வெட்டு ஆகும்.

கல்வெட்டின் வகைகள்


  1. குகைக் கல்வெட்டு
  2. குன்றுக் கல்வெட்டு
  3. தூண் கல்வெட்டு
  4. சுவர்க் கல்வெட்டு

  • இலங்கையின் புராதனக் கல்வெட்டுகள் பிராமிய எழுத்துக்களில் எழுதப்பட்டவை ஆகும். 

குகை கல்வெட்டு
கற்பீலிகளின் அருகில் எழுதப்பட்டவை
குன்றுக் கல்வெட்டு
கற்பாறைகளின் மேல் எழுதப்பட்டவை
தூண் கல்வெட்டு
கருங்கல் தூணில் எழுதப்பட்டவை
சுவர்க் கல்வெட்டு
கற்பலகைளில் எழுதப்பட்டவை

கல்வெட்டிலுள்ள விபரங்கள்

  1. விஹாரைகளின் நிர்வாகம் பற்றியது.
  2. அரச கட்டளை பற்றியது
  3. வர்த்தக நடவடிக்கை பற்றியது
  4. வரி அறவீடு முறை பற்றியது
  5. தவறுக்கான மன்னிப்பளித்தல் பற்றியது
  6. தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டல் பற்றியது
                               கல்பொத கல்வெட்டு


                             சீகிரிய குன்றுக் கல்வெட்டு


நாணயங்கள்

உள்ளநாட்டு நாணயங்கள்
  • இலங்கையின் மிகப் புராதன நாணயம் கஹபண. 
  • ஏனைய நாணயங்கள்                    
  1.  யானை மற்றும் சுவஸ்திகா உருவம் பதித்த நாணயம்.
  2. லக்ஷ்மியின் உருவம் பதித்த நாணயம்
  3. அக எனும் பொன் நாணயம்
  4. கம்பமச எனும் செப்பு நாணயம் 
இந்நாணயங்கள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கான அச்சுகளும் அகழ்வின் போது கண்டெடுக்கப்படுள்ளன.

வெளிநாட்டு நாணயங்கள்
  • ரோம, சீன, இந்திய நாணயங்கள் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் மூலம் அறியக்கூடிய தகவல்கள்

  1. நாட்டின் பொருளாதார நிலை
  2. வர்த்தகம்
  3. உலோகப் பாவனை
  4. தொழில்நுட்ப அறிவு
நாணயங்கள் பற்றிய ஆய்வு நாணய விஞ்ஞானம் எனப்படும்.




யானை, சுவஷ்திக்கா நாணயங்கள்

கஹபண நாணயம்


           



கஸ்செபு (இந்தியாவில் செய்யப்பட்டது)



சிதைவுகள்

  1. கட்டிடங்கள்
  2. விகாரைகள்
  3. கற்த்தூண்கள்
  4. பொய்கைகள் 
  5. குளங்கள்
  • சிதைவுகளின் மூலம் முற்கால மக்களின் கலை ஆற்றல், தொழில்நுட்ப அறிவு, கலைத் திறன், சுற்றாடல்  பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் என்பன பற்றி அறிந்துகொள்ள முடியும்.

கட்டடங்கள்


 சிதைந்த கட்டிடம்

விகாரைகள் 

 தூபாராம விகாரை

 ருவன்வெளிசாய

அபயகிரி விகாரை

கற்த்தூண்கள் 

 நிஸ்ஸங்கலதா மண்டபம்

ஆயிரம்கால் மண்டபம்

பொய்கைகள் 

 குட்டம் பொக்குன

தாமரை தடாகம்

சித்திரமும் செதுக்கல்களும் சிற்பங்களும்

சித்திரம்

  • இவை இலங்கையின் கலாசார வளர்ச்சியின் வரலாற்றைக் காட்டும் உயிரோட்டமான சாட்சிகளாகும்.
  • இதன் மூலம் எமது முன்னோர்களின் ஆடையைணிகள், கலையாற்றல்கள், பயன்படுத்திய ஆபரணங்கள், சமய நம்பிக்கைகள் என்பனவற்றை அறிந்துகொள்வதற்கு பெரிதும் உதவுகின்றன.

      உதாரணம்: சிகிரிய ஓவியங்கள் - இதன் மூலம் இலங்கைப் பெண்களின்                                                                                   ஆடை ஆபரணங்கள், கூந்தல் அலங்காரம்                                                                         என்பவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.








செதுக்கல்கள்

அனுராதபுர சந்திரவட்டக்கல்

பொலநறுவ சந்திரவட்டக்கல்


மனிதனும் குதிரைத்தலையும் (இசுருமுனிய விகாரை)



நீராடும் யானை ( (இசுருமுனிய விகாரை)
இசுருமுனிய காதலர் சிலை


காவற்கல்

கொரவக்கல்



சிற்பங்கள்

அவுக்கண நிற்கும் சிலை

சமாதிச்சிலை (குட்டம்பொகுன)

சயனசிலை (பொலநறுவ கல்விகாரை)



பொலநறுவையில் சோழர்கால சிற்பங்களும் கட்டிடங்களும்

முதலாம் இலக்க சிவன்கோவில்

இரண்டாம் இலக்க சிவன்கோவில்

சிவன் பார்வதி சிலை

நடராஜர் சிலை

இலக்கிய மூலாதாரங்கள்

உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

  • இலங்கையின் உள்நாட்டு மூலாதாரங்களுள் மிகவும் பழமையான நூல் தீப வம்சமாகும். இது கி.பி. நாலாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளது. மகா சேன மன்னனின் ஆட்சி முடியும் வரையிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
  • மகா வம்சம் மகாநாம தேரரால் எழுதப்பட்டுள்ளது. இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு கால அளவில் எழுதப்பட்டதாகும். மகா வம்சத்தில் இலங்கை வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். 
  • மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கல் வெட்டுகள் மூலமும் ஆவணங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இதன் உரை நூல் தீகாவ. 
உள்நாட்டு இலக்கிய வகைகள்
இலக்கிய வகை
உதாரணம்
தூது காவியம்
மயூர சந்தேசய, திசர சந்தேசய, செல லிகினி சந்தேசய
புகழ் காவியம்
பெரகும்பா சிரித்த
போர்க் காவியம்
சீதாவாக்க சடன, இங்கிரிசி சடன, கொன்ஸ்சந்தின்னு சடன

வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

வெளிநாட்டவர்களும் இலங்கை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

சீன இலக்கியம்
பாகியன் தேரரின் தேச சஞ்சார அறிக்கை (பௌத்த இராஜ்ஜியம் பற்றியது)
அரபு இலக்கியம்
இபின்பதுதாவின் தேச சஞ்சார அறிக்கை
போத்துகேய இலக்கியம்
திபைரோ என்பவரின் இலங்கை பற்றிய நூல்
ஒல்லாந்து இலக்கியம்
பிலிப்ஸ் பல்டியஸ் (போல்டியசின் இலங்கை வரலாறு)
ஆங்கில இலக்கியம்
ராபர்ட் நொக்ஸ் அவர்களின் நூல்



நபர்
நூல்
நாடு
அரிச்டோடல்
டிமுண்டோ
கிரேக்கம்
மெகஸ்தனிஸ்
இண்டிகா
கிரேக்கம்
பிளினி
நச்சுரளிஸ் ஹிஸ்டோரிய
ரோமம்
தொலமி
பூகோள சாஸ்திரம் பிரவேசம்
கிரேக்கம்
ப்ரோகோபியபஸ்
பாரசீக யுத்தம்
ரோமம்
கொச்மஸ்
டேபோகிரபியா கிறிஸ்டியான

கௌடில்யன்
அர்த்த சாஸ்திரம்
இந்தியா



வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம்

  • தான் வாழும் சமூகம் மற்றும் உலகம் பற்றிய புரிந்துணர்வைப் பெறுதல். இறந்த கால அனுபவங்களின் மூலம் நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தை சிறப்பாக்குதல். 
  • நாட்டின் தேசிய தனித்துவத்தை அறிந்துகொள்ளுதல்.
  • மனித தன்மையை மதிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்ற்படுத்துதல்.
  • மாற்றுக்காலசாரத்தை மதித்தல்
  • வேறுபட்ட கருத்துக்களையும் சகித்துக்கொள்ளல்.